News April 22, 2025
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News September 11, 2025
FLASH: தலைநகரில் 5 தீவிரவாதிகள் கைது!

டெல்லியில் 5 தீவிரவாதிகளை கைது செய்த போலீசார், வெடிகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் சில பாகங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரவாத கும்பல் தொடர்பாக NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த 5 பேர் சிக்கியுள்ளதாகவும், இவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
News September 11, 2025
ஆதரவாளர் சுட்டுக்கொலை: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் தனது ஆதரவாளர் <<17674041>>சார்லி கிர்க் <<>>சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இடதுசாரி அரசியலின் தீவிரம் தான் காரணம் என அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். மறைந்த சார்லியின் குரல் இனிமேல் தான் ஓங்கி ஒலிக்கும் என கூறிய அவர், தனது ஆட்சியில் அரசியல் வன்முறைக்கு பங்களிக்கும் ஒவ்வொருவரையும், அதற்கு நிதியளித்து ஆதரிக்கும் அமைப்புகளையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 11, 2025
BREAKING: தங்கம் விலை.. நிம்மதியான செய்தி

சென்னையில் தங்கம் விலையில் தொடர்ந்து 2-வது நாளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப்.9-ம் தேதிகளில் சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து 2-வது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.