News April 22, 2025

ஜாதி சான்றிதழில் எழுத்துப் பிழை கூடாது: ஐகோர்ட்

image

ஜாதி சான்றிதழில் சாதி பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘இசை வேளாளர்’ என்ற சாதியின் பெயரை ‘இசை வெள்ளாளர்’ எனக் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மாநில அரசு பிழையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 22, 2025

இனி குழல் ஊதி வழிவிட சொல்லலாம்

image

வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்களால் அதீத இரைச்சலும், ஒலி மாசும் ஏற்படுவது நமக்கு தெரியும். இதனை சீர் செய்யும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இனி, வாகனங்களில் இனிமையான இசை தரும் புல்லாங்குழல், தபேலா, ஹார்மோனியம் ஆகிய ஒலிகளை மட்டுமே ஹாரனாக பயன்படுத்தும் வகையில் திட்டம் கொண்டு வர இருப்பதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து, உங்களது கருத்து என்ன?

News April 22, 2025

ஓடும் பஸ்ஸில் உடலுறவு: இளஞ்சோடி அட்ராசிட்டி

image

நவிமும்பையில் ஓடும் அரசு பஸ்ஸில், ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ்ஸில் கூட்டம் இல்லாத நிலையில், பின்சீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இதை வீடியோ எடுத்து பதிவிட, விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, கண்டக்டர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தரங்கம் அவரவர் உரிமை, ஆனால், பொது இடத்தில் இப்படி செய்யலாமா?

News April 22, 2025

வர்ணனை செய்ய தடை? மௌனம் கலைத்த ஹர்ஷா

image

கொல்கத்தா மைதானம் குறித்து தெரிவித்த கருத்தால், அங்கு நடைபெறும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு <<16168983>>ஹர்ஷா போக்லே<<>> மறுப்பு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் நடக்கும் 2 போட்டிகளுக்கு மட்டுமே தான் வர்ணனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், குடும்ப சூழல் காரணமாக நேற்றைய போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!