News April 22, 2025
ராயபுரத்தில் ரயில் தடம் புரண்டது

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 17 வேலைவாய்ப்புகள்

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் 17 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.dcourts.gov.in/ ஐப் பார்வையிட்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம். இது குறித்த அறிவிப்பை சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
News July 9, 2025
சென்னையின் ஸ்பெஷல் உணவுகள் எங்கே கிடைக்கும் தெரியுமா?

✅ மைலாப்பூர் பில்டர் காபி
✅ மெரினா பீச் சுண்டல்
✅ பர்மா பஜார் அத்தோ & மோய்கோ
✅ சௌகார்பேட்டை முறுக்கு சீஸ் சான்விச்
✅ வியாசர்பாடி மோலேசா
✅ மண்ணடி நோம்பு கஞ்சி & மட்டன் சமோசா
✅ சௌகார்பேட்டை லஸ்ஸி
✅ காசிமேடு கடல் உணவு
✅ ரிச்சி ஸ்ட்ரீட் குலாப்ஜாமூன், ரசகுல்லா, ஜிலேபி, பால்கோவா
✅ பெசன்ட் நகர் மீன் பஜ்ஜி, இறால் பஜ்ஜி
உங்க நண்பர்களோட இங்கெல்லாம் போயி ஒரு புடி புடிங்க… அவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News July 9, 2025
அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சகர் பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், 14 வயதுப் நிரம்பியவர்களாகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கோவில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.