News April 22, 2025
22 இடங்களில் சேதமடைந்த சாலை: பரிதவிக்கும் மக்கள்

ஜம்மு–காஷ்மீரை புரட்டி போட்ட நிலச்சரிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் பல கி.மீ தூரத்திற்கு சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெடுஞ்சாலையில் 22 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமை சீரடைய மேலும் 5 நாள்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. மீட்புப் பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள CM உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 11, 2025
உதயநிதி ஸ்டைலில் அன்புமணி எடுத்த செங்கல்!

2021 தேர்தல் பிரசாரத்தின்போது, எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை விமர்சிக்கும் வகையில், AIIMS என எழுதப்பட்ட செங்கலை காட்டி உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கடலூரில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக திமுக அரசால் நாட்டப்பட்ட அடிக்கல்லை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததாக, அன்புமணி கூறினார். கல்லூரி கட்டுமானத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
News September 11, 2025
காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க!

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் மசாலா டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை & பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
*இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் & குங்குமப்பூ சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
*டீ செய்யும் போது, அதில் இந்த பொடியை கலந்தால், மசாலா டீ ரெடி. SHARE IT.
News September 11, 2025
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி இன்று (செப்.11) 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகள், பார்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. SHARE IT.