News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <
Similar News
News October 26, 2025
11 வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் பாலகுரு உளுந்தூர்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராக என மொத்தம் 11 வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News October 25, 2025
நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கூட்டம்

மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அந்தந்த வார்டு உறுப்பினர் தலைமையில் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களை குறைகளை தெரிவிக்கலாம். இதில் மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News October 25, 2025
கால்நடைகளை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மழையில் ஆடுகளை வெளியில் மேச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு பண்ணையாளர்கள் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி அளிக்கலாம்.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம். கால்நடை வளர்ப்போர் உரிய வழிமுறைகளை பின்பற்றி மழையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


