News April 22, 2025

எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு

image

சட்டப்பேரவை வளாகத்தில் இபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர். நயினார் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். இபிஎஸ்-ன் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News April 22, 2025

பிராமணர்கள் மீதான அவதூறு.. அனுராக் காஷ்யப் மன்னிப்பு

image

‘புலே’ பட விவகாரத்தில், பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதுதொடர்பாக மன்னிப்பு கோரிய அனுராக் தற்போது மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் கண்ணியத்தை மறந்துவிட்டதாகவும், முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டதற்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

News April 22, 2025

ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

image

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

News April 22, 2025

BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

image

2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <>www.upsc.gov.in<<>> இணையதளத்தில் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் ஷக்தி துபேவும், தமிழக அளவில் சிவச்சந்திரனும் முதலிடம் பிடித்துள்ளனர்.

error: Content is protected !!