News April 22, 2025

புதுச்சேரி: அவசியம் அறியவேண்டிய தொடர்பு எண்கள்

image

▶மாவட்ட நீதி மன்ற நடுவர்: 0413-2299502, ▶துணை ஆட்சியர் (தலைமையகம்): 0413-2299513, ▶துணை ஆட்சியர் (வடக்கு வருவாய்): 0413-2231251, ▶துணை ஆட்சியர் (தெற்கு வருவாய்): 0413-2667945, ▶மாவட்ட பதிவாளர்: 0413-2247194, ▶துணை ஆணையர் (கலால்): 0413-2252847. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

Similar News

News December 26, 2025

புதுவை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது லாரி மோதல்

image

காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உத்திராபதி (65). இவர் சம்பவத்தன்று அண்ணா கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ரவி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News December 26, 2025

புதுவை: சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் தப்பி ஓட்டம்

image

அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேர் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளனர். விசாரணையில் தப்பியோடியவர்களில் ஒருவர் காரைக்காலைச் சேர்ந்தவர், 2 பேர் புதுவையைச் சேர்ந்தவர்கள். மேலும் இதுகுறித்த புகாரின் படி, போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.

News December 26, 2025

புதுச்சேரி: தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு

image

“புதுச்சேரியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா்களைச் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜன.3 மற்றும் ஜன.4 ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.” என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!