News April 4, 2024
பள்ளி மாணவர்களின் நலன் காக்க..!

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
பெரம்பலூரில் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாளை (20.09.2025) மாலை-4 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, மாபெரும் பொதுக்கூட்டமானது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
News September 19, 2025
பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செப்டம்பர் 20ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கூறினார்.
News September 19, 2025
பெரம்பலூர்: பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

பெரம்பலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..