News April 22, 2025
கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு 0422-2642388. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 22, 2025
மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று(ஏப்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
News April 22, 2025
கோவை: அங்கன்வாடி மையங்களில் வேலை!

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை<
News April 22, 2025
கோவை: காவலர் ஆற்றில் மூழ்கி பலி!

கோவை ராஜவீதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் கோவை நகர ஆயுதப்படை பிரிவின் 11வது படைப்பிரிவில், தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், அங்குள்ள அமராவதி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.