News April 22, 2025
இந்தியாவை நெருங்கும் பெரிய ஆபத்து.. ஆய்வில் அதிர்ச்சி

இமயமலையில் ஏற்படும் நிலநடுக்கத்தால் இந்தியா பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் பில்ஹாம் கணித்துள்ளார். வட இந்தியாவில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவில் 8.2-8.9 வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், இதனால் சுமார் 30 கோடி பேர் பாதிப்பை சந்திக்க நேரிடலாம் என்றும் கணித்துள்ளார். அண்மைக் காலமாக வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
Similar News
News April 22, 2025
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
News April 22, 2025
BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <
News April 22, 2025
இரவு பார்ட்டி.. அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் தடை

இளம் வீரரான அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் காட்டிய கண்டிப்பு குறித்து யுவராஜின் தந்தை சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். பயிற்சிக்காக அபிஷேக் யுவராஜ் வீட்டிற்கு வந்த போது, அவர் இரவு பார்ட்டி, பெண் தோழியுடன் சுற்றுவது போன்றவற்றை யுவராஜ் தடுத்ததாக கூறியுள்ளார். இதேபோல் ஷுப்மன் கில்லுக்கு யுவராஜ் அறிவுரை வழங்கியுள்ளாராம். அபிஷேக் சர்மா கிரிக்கெட் உலகில் நட்சத்திரமாக ஜொலிக்க யுவராஜ் ஒரு முக்கிய காரணம்.