News April 22, 2025

தருமபுரியில் தொடர்ந்து சதம் அடிக்கும் வெயில்

image

தமிழகத்தில், நேற்று (ஏப்ரல் 21) 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூரில் 103.1 டிகிரியும், தருமபுரி மாவட்டத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவானது. தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருவதால், தருமபுரி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர், குளிர்பானங்களை அதிகம் குடியுங்கள். முடிந்தளவுக்கு மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்திடுங்கள்.

Similar News

News September 21, 2025

தர்மபுரி: புரட்டாசி அமாவாசையில் இதை செய்யுங்க!

image

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். தர்மபுரியில் தென்பெண்ணை ஆற்று கரைகள், ஒகேனக்கல் காவிரி ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர் பண்ணுங்க!

News September 21, 2025

தருமபுரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

தருமபுரி மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI <<>>என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டு, ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE IT!

News September 21, 2025

தமிழை வாழ வைத்த தர்மபுரி தமிழர்!

image

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க கால தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவர். கடையேழு வள்ளல்களில் இவரும் ஒருவர். இன்றைய தர்மபுரி இவருடைய தலைநகராக இருந்தது. உண்டால் நீண்ட நாள் வாழவைக்க கூடிய நெல்லிக்கனி தனக்கு கிடைத்தும் அதனை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தவர். “நான் இறந்தால் ஒருவன் இறப்பான். ஆனால், நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தமிழ் மொழி வாழும்” என்று ஔவையிடம் கூறியவர். SHARE IT!

error: Content is protected !!