News April 22, 2025
காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (SI) தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 21) தெரிவித்துள்ளார். மேலும், தகவல்களுக்கு தொலைபேசி எண்கள் 0416 2290042 மற்றும் 9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 5, 2025
வேலூர்: பெண் போலீஸ் மோசடி!

வேலுார், மேல்பாடி காவல் நிலையத்தில் ஜோதி என்ற பெண் போலீஸ் 8ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், 2019ம் ஆண்டு, தங்கள் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதாக கூறி, இளையநல்லுரை சேர்ந்த சிவக்குமாரிடம் மொத்தமாக ரூ.1,00,000 வாங்கியுள்ளார். பின் சிவகுமார் பணத்தை கேட்கும்போது “பணமெல்லாம் தர முடியாது; வேண்டுமானால் கோயில் கதவை கழற்றி எடுத்து செல்’ என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
News November 5, 2025
வேலூர் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News November 5, 2025
வேலூர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சாலைகளில், மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் பல வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


