News April 22, 2025
சித்த மருத்துவர் செய்யுற வேலையா இது?

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையை ₹1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சித்த மருத்துவர் சத்யபிரியா கைதாகியுள்ளார். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது, பிரசவம் பார்ப்பது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், திருமணத்தை மீறிய உறவில் பிறக்கும் குழந்தைகளை இது போல விற்பனை செய்து வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
Similar News
News November 8, 2025
IND Vs AUS T20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

IND Vs AUS 5-வது T20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்(C), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர். ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும்.
News November 8, 2025
BREAKING: மருத்துவமனைக்கு விரைந்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டவுடன் பதறிப்போன ரஜினி, ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்று அண்ணனிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதன்பின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
News November 8, 2025
பாஜக, விஜய்யை மறைமுகமாக சாடிய மு.க.ஸ்டாலின்

ஒரே நேரத்தில் பாஜக, விஜய்யை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவின் வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள் என்று பாஜகவையும், நேற்று கட்சி ஆரம்பித்த உடன் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று விஜய்யையும் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மேலும், திமுகவை போல் வெற்றிபெற வேண்டும் என்றால் திமுகவை போன்ற அறிவும், உழைப்பும் தேவை எனக் கூறினார்.


