News April 22, 2025
6 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

தலைப்பை படித்தவுடன் ஷாக்காக வேண்டாம். ஹரியானாவில், 2 சகோதரர்கள் குழந்தைகளின் திருமண செலவை குறைக்க நினைத்து, இந்த யோசனையை கண்டுபிடித்துள்ளனர். தங்களது 6 பிள்ளைகளுக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 மகன்களுக்கு திருமணம் கடந்த 18-ம் தேதியும், 4 மகள்களுக்கு 19-ம் தேதியும் திருமணம் செய்யப்பட்டது. ஊருக்கு இதுவும் ஒரு நல்ல மெசெஜ் தானே!
Similar News
News September 11, 2025
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை: திருமா

அரசமைப்பை பாதுகாக்கவே CM ஸ்டாலினுடன் கைகோர்த்து உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு, விசிக அடிபணிந்து விட்டதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமா, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திமுக அக்கறை கொண்டுள்ளது என பாராட்டினார். மேலும், தமிழகத்தில் அம்பேத்கரின் பெயரை ஆங்காங்கே நிறுவியதில் திமுகவுக்கு பங்கு உண்டு என்றார்.
News September 11, 2025
வியாழக்கிழமைகளில் குரு பகவானின் முழு அருள் பெற…

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன். Share it.
News September 11, 2025
இவரை கண்டுபிடிச்சு குடுங்க: லாரன்ஸ்

வாழ்வாதாரத்திற்காக போராடும் 80 வயது முதியவரை கண்டுபிடிக்க உதவுமாறு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மின்சார ரயிலில் முதியவர் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக அதிரசம், போளி விற்பதாக SM-ல் தகவல் பரவியது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அவரை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ₹1 லட்சம் கொடுக்க தயார் எனவும் அவருடைய விவரம் தெரிந்தவர்கள் தனக்கு தகவல் அளிக்குமாறும் லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.