News April 22, 2025
பாப் உலக ஜாம்பவான் ஹஜ்ஜி அலெஜாண்ட்ரோ காலமானார்!

பிரபல நடிகரும், பாடகருமான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹஜ்ஜி அலெஜாண்ட்ரோ காலமானார். பாப் உலகின் ஜாம்பவானாக இருந்த இவர், சில காலமாகவே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 70, 80களில் தனது கலைப்பயணத்தை தொடங்கி, ‘Kay Ganda ng Ating Musika’, ‘Nakapagtataka’ போன்ற உலகளவில் ஹிட்டடித்த ஆல்பங்களில் பாடியுள்ளார். Kumusta ka, Hudas, Stepanio போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். #RIP
Similar News
News October 30, 2025
Sports Roundup: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கம்

*ஆசிய யூத் கேம்ஸ் மல்யுத்தம் 55 கிலோ பிரிவில், ஜெய்வீர் சிங் தங்கம் வென்றார். *65 கிலோ எடைப்பிரிவில் கெளரவ் புனியாவுக்கு வெள்ளி கிடைத்தது. *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டி20-ல் வங்கதேசம் தோல்வி. *புரோ கபடி குவாலிஃபையர் இரண்டில் புனேரி பல்தான் அணி 50-45 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது. *ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20-ல் ஆப்கானிஸ்தான் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
News October 30, 2025
கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
அக்டோபர் 30: வரலாற்றில் இன்று

*1502 – வாஸ்கோடகாமா 2-வது முறையாக கோழிக்கோடு வந்தார்.
*1945 – ஐநாவில் இந்தியா இணைந்தது.
*1908 – தேவர் ஜெயந்தி.
*1966 – ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான KV ஆனந்த் பிறந்தநாள்.


