News April 22, 2025
சொந்த வீடு கட்ட முடியுமா? கலக்கத்தில் மிடில் கிளாஸ்

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை ஒரே அடியாக யூனிட்டுக்கு ₹1,000 வரை உயர்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதியளித்திருப்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். யூனிட் ₹4,000க்கு விற்று வந்த ஜல்லி, இனி ₹5,000க்கு விற்கப்படும். எம்.சாண்ட் விலையும் ₹6,000 ஆக உயர்கிறது. இதனால் சொந்த வீடு கட்ட நினைப்போரின் கனவு, கனவாகவே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 23, 2025
ராகுல் தான் நாளைய PM: செல்வப்பெருந்தகை பதிலடி

நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், ராகுல் ஒருபோதும் பிரதமராக முடியாது என அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இம்மாதிரியான கருத்துக்கள் ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
News August 23, 2025
அட்லி-அல்லு அர்ஜுன் படம்.. Escape Mode-ல் தீபிகா?

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்தின் ஷூட்டிங், கதை விவாதம் என்ற பெயரில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே போகிறதாம். ஃப்ளாப் பட்டியலில் தானும் சேரக்கூடாது என்பதற்காக அலர்ட் மோடில் இருக்கும் அட்லி, கதை விவாதக் குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு விவாதத்திற்கும் ஆஜராகிவருகிறாராம். ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காததால், ‘எஸ்கேப் ஆகிவிடலாமா’ என்று தீபிகா படுகோன் யோசிப்பதாக கூறப்படுகிறது.