News April 22, 2025
ராணிப்பேட்டையில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https:// forms.gle/ XtmB4RhQ99jXzQnK6 என்ற google லிங்க் மூலம் பதிவு செய்து இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க…
Similar News
News January 14, 2026
ஆற்காடு அருகே அட்டூழியக் கொள்ளை!

ராணிப்பேட்டை: ஆற்காட்டை அடுத்த எசையனூர் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதில் 20 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
ராணிப்பேட்டை: முட்புதரில் சிக்கிய சிறுவன்!

மருதாலம் அடுத்த கசத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரி. இவரது மகன் லிங்கேஷ், அங்குள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற மாணவன் கடந்த ஜன.12ஆம் தேதி இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவனைத் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள முட்புதரில் படுத்து தூங்கியதை அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மாணவனை மீட்டு நேற்று(ஜன.13) பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
News January 14, 2026
ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.


