News April 22, 2025
விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விழுப்புரம் தாலுகா போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
விழுப்புரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
விழுப்புரம்: நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக கடந்த அக்.22அன்று விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை நவ-01 பணி நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
News October 31, 2025
கலை, கலாசார மேம்பாடு: விண்ணபங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் / ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.


