News April 22, 2025
நீலகிரி: காட்டு யானை தாக்கி பெண் மரணம்

நீலகிரி, மசினகுடியைச் சேர்ந்த சரசு என்பவர், அஞ்சலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரை நேற்று, உதகை, சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் சாலையில், காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரசு உயிரிழந்தார். இவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இவரது இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
நீலகிரி: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு <
News August 22, 2025
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்!

ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நுறி வழிகாட்டும் மையத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் நடைபெற்று வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான திட்ட நிரல்படி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வார நாட்களில் நடைபெறுகிறது.
News August 22, 2025
விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 2000 டன் உரங்கள் தயார்!

என்.சி.எம்.எஸ்.,மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் கூறுகையில்; மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது,விவசாயிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட வகையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2000 டன் உரம் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கூட்டுறவு நிறுவனத்தை அணுகலாம்.