News April 22, 2025
கணவர் கண் முன்னே மனைவி உயிரிழப்பு

ராசிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 66) இவரது மனைவி பூங்கோதை (62). இருவரும் நேற்று டூவீலரில் மல்லசமுத்திரம் அருகே மொரங்கம் காட்டூர் பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது டெம்போ மோதியது. இதில் பூங்கோதை (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் ராமச்சந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 22, 2025
மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு “நன்னீர் மீன்வளர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் வேலை இல்லாத பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலை கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
News April 22, 2025
கோடை மழையை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுரை

நாமக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் பெய்யும் மழையினை கோடை மழை என்று அழைக்கிறோம் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தற்போது பெய்துள்ள கோடை மழையினைக் கொண்டு கோடை உழவு செய்து மழைநீர் சேகரிப்பு களைக்கட்டுப்பாடு பூச்சி நோய் மேலாண்மை ஆகிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்
News April 22, 2025
நாமக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 144 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.