News April 22, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருட்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருட்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது: ✦வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிஷ்டத்தை உண்டாக்கும் ✦கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருட்கள் (வாசப்படி மேட், சிலைகள்) இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ✦உடைந்த சேதமடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
Similar News
News April 22, 2025
தங்கம் போல் உயரும் எலுமிச்சை: கிலோ ₹150

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இளநீர், எலுமிச்சை என பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் தாகம் தணிக்க நம்புவது எலுமிச்சை ஜூஸ்தான். இந்தச் சூழலில், ஒரு கிலோ எலுமிச்சை விலை ₹150 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ ₹120க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News April 22, 2025
டெல்லியில் தமிழர்கள் வீடுகளை அகற்ற கடும் எதிர்ப்பு!

டெல்லி ஜன்புரா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ, சாலை மேம்பாட்டிற்காக ‘மதராஸி’ குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வாழ்வாதாரம், பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
News April 22, 2025
பாவேந்தருக்காக தமிழ் வார விழா: CM ஸ்டாலின்

பாவேந்தர் பிறந்த நாளையொட்டி ஏப். 29 – மே 5 வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தமிழ் மொழியையும், பாவேந்தரையும் கொண்டாடும் வகையில் இவ்விழா நடத்தப்படுவதாக தெரிவித்தார். மாவட்டங்களில் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடத்தி, சிறந்த படைப்புகளுக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என்றும் கூறினார்.