News April 22, 2025
எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி ரூ.1,000 உயர்வு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விலையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ₹1,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2வது கல்யாணம்

CSK அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை 2-வது திருமணம் செய்ய உள்ளதாக நடிகை சம்யுக்தா உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் ஆவார். அனிருதா ஸ்ரீகாந்த் – சம்யுக்தா இருவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
EPS முகத்திரை கிழிந்தது: ஆர்.எஸ்.பாரதி

பெண்கள் பாதுகாப்பு குறித்து EPS-ன் அற்பத்தனமான அரசியல் அம்பலமானது என்று ஆர்.எஸ்.பாரதி கட்டமாக விமர்சித்துள்ளார். கோவை விவகாரத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், எந்த வகையிலாவது திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நாள்தோறும் விஷமப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் EPS-ன் முகத்திரை கிழிந்துள்ளது எனவும் சாடியுள்ளார்.
News November 8, 2025
FLASH: 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக TN-ல் நவ. 8-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கெனவே IMD அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வெளியே செல்வோர் மறக்காமல் குடையோடு செல்லுங்கள்.


