News April 22, 2025
குமரியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 34 லட்சம் நிதி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.
Similar News
News December 21, 2025
குமரி மக்களே.., ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?

குமரி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 21, 2025
குமரி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்!

படர்ந்தாலு மூடு அருகே பூவ காட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் ராஜ் (25) இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் வழக்கு உள்ளது.அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சஜின் ராஜ் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News December 21, 2025
குமரி: பெண்ணின் ஆபாச வீடியோவை பரப்பிய இளைஞர்!

மதுரை அம்பேத்கார் தெரு அஜித்குமார்(23), பொன்மனை 20 வயது பெண்ணுடன் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமாக பழகியுள்ளார். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் அவரிடமிருந்து விலகினார். இதனால் அஜித்குமார் அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய வீடியோக்கள், ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். குமரி சைபர் கிரைம் போலீசார் அஜிக்குமாரை நேற்று செய்தனர்.


