News April 22, 2025
கூட்டம் சேரலயாம்.. காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட்

கார்கே நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்ததால் காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காங். கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் கார்கே பங்கேற்ற கூட்டத்தில் காலி சேர்களே அதிகம் இருந்துள்ளன. இதனால், கூட்டம் நடைபெற்ற புக்சார் மாவட்டத்தின் காங். தலைவர் மனோஜ் குமார், கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 22, 2025
இனி ஓசூரில் இருந்தும் பறக்கலாம்!

ஓசூரில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய விமான நிலையத்திற்கான ஆய்வு நடத்தப்பட்டு அதன் இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 22, 2025
அடுத்த ஆஸ்கர் விருது விழா எப்போது?

98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி பரிந்துரைக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்து, இறுதி ஓட்டெடுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.
News April 22, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் போர்டு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளது. அதாவது, டிக்கெட் வாங்கிய பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளது. முன்னதாகவே வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.