News April 22, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

▶ அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான். ▶ அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும். ▶ கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும். ▶ இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.
Similar News
News April 22, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,290-க்கும் ஒரு சவரன் ₹74,320-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
News April 22, 2025
இனி ஓசூரில் இருந்தும் பறக்கலாம்!

ஓசூரில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய விமான நிலையத்திற்கான ஆய்வு நடத்தப்பட்டு அதன் இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 22, 2025
அடுத்த ஆஸ்கர் விருது விழா எப்போது?

98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி பரிந்துரைக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்து, இறுதி ஓட்டெடுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.