News April 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 314 ▶குறள்: இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். ▶பொருள்: நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
Similar News
News April 24, 2025
தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.24) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,005-க்கும், சவரன் ₹72,040-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹2,200 குறைந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
News April 24, 2025
2 வாரம் இண்டெர்நெட் இல்லாமல் இருந்தால்…

இப்போது, பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னையே எந்த ஒரு விஷயத்திலும் Focus பண்ண முடியாமல் தொடர்ந்து தடுமாறுவது தான். ஆனால், 2 வாரம் இண்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் மூளை 10 ஆண்டுக்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே புத்துணர்ச்சியுடன் செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். Texas யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ட்ரை பண்ணி பாருங்க!
News April 24, 2025
மோசமான ரெக்கார்டை படைத்த SRH!

IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும், RCB (132), KKR (125), மும்பை (121), ராஜஸ்தான் (113) மற்றும் CSK (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.