News April 4, 2024
பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் கனிராவுத்தர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறதா என சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
News October 19, 2025
ஈரோடு அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

ஈரோடு, பவானி அருகே கேசரிமங்கலம் பிரிவு பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பவானி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
News October 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.