News April 22, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(15.09.2025), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா என அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
News September 15, 2025
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை

தூத்துக்குடி 110/22 KV நகர் துணைமின் நிலையத்தில் நாளை(செப்.16) பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் KV நகர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1, 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையபுரம் ரோடு, தெப்பகுளம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தபடும்.
News September 15, 2025
குலசை கோவில் நிலம் ஏலம் அறிவிப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பாண்டீஸ்வரர் கோவில் மற்றும் எழுவரைமுக்கி சாஸ்தா ஐயப்பன் அய்யனார் கோவில் நிலங்கள் வரும் 18ம் தேதி காலை 11:30 மணிக்கு துறை அலுவலர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏலம் எடுப்பவர்கள் 2000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.