News April 22, 2025
‘அந்த’ விஷயத்தில் முத்துனவங்க யார் தெரியுமா?

சின்ன வயதில் முத்துன கத்திரிக்காயாக இருக்கும் நாட்டவர்கள் யார் தெரியுமா? பிரேசில் தானாம். சராசரியாக 17 வயது 3 மாதங்களில் அந்நாட்டு இளைஞர்கள் விர்ஜினிட்டியை இழந்து விடுகிறார்களாம். வளர்ந்த நாடான அமெரிக்காவில் 18 வயது 4 மாதங்களிலும், பிரிட்டனில் 18 வயது 3 மாதங்களிலும் ‘அந்த’ சுகத்தை பெற்று விடுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஒழுக்கமானவர்கள். 22 வயது 5 மாதங்களில் தான் ‘அந்த’ அனுபவம் கிடைக்கிறதாம்.
Similar News
News April 22, 2025
கூட்டம் சேரலயாம்.. காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட்

கார்கே நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்ததால் காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காங். கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் கார்கே பங்கேற்ற கூட்டத்தில் காலி சேர்களே அதிகம் இருந்துள்ளன. இதனால், கூட்டம் நடைபெற்ற புக்சார் மாவட்டத்தின் காங். தலைவர் மனோஜ் குமார், கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
News April 22, 2025
மோடி சிறந்த தலைவர்: USA துணை அதிபர் புகழாரம்

PM மோடி சிறந்த தலைவர் என USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜே.டி.வான்ஸை வரவேற்ற PM மோடி, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு, மோடியை சந்தித்தது கவுரவம் என்றும், அவர் சிறந்த தலைவர் எனவும் ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
News April 22, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

▶ அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான். ▶ அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும். ▶ கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும். ▶ இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.