News April 21, 2025
மத புரட்சி செய்த போப் பிரான்சிஸ்!

கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவது பாவச் செயல் அல்ல, அதுதான் மனித குலத்திற்கான வளர்ச்சி என்று எந்த மத தலைவரும் சொல்லாததை சொன்னவர் போப் பிரான்சிஸ். கத்தோலிக்க மதத்தை முற்போக்கு பாதைக்கு மாற்ற தன்னால் இயன்றதை செய்தவர். காலநிலை மாற்றம், காசா வன்முறை குறித்து பெருங்கவலை கொண்டவர். Global South என அழைக்கப்படும் வளர்ந்துவரக்கூடிய நாடுகளில் இருந்து வந்த முதல் போப்பும் பிரான்சிஸ்தான்.
Similar News
News September 11, 2025
புத்தர் பொன்மொழிகள்

*நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள். *உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை. *தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். *உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
News September 11, 2025
சூறாவளி கிளம்பியதே.. WCக்கு குறிவைத்த ரோஹித்

இந்திய அணியின் ODI கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சில மாதங்களாக கிரிக்கெட் களம் காணாமல் இருந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ODI தொடருக்கு தயாராக பயிற்சியை தொடங்கியுள்ளார். ரோஹித் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவினாலும், 2023ல் தவறவிட்டதை 2027ல் அடையும் எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
News September 11, 2025
7,000 கைதிகள் தப்பினர்

நேபாளத்தில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் சிறைகளில் இருந்து தப்பியுள்ளனர். அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல சிறைகளில் இருந்து 7 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ளனர். அதில் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்திருக்கின்றனர். உ.பி எல்லையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு ராணுவம் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளதால் இயல்பு நிலை திரும்புகிறது.