News April 21, 2025
HIV பாதித்த குழந்தைகளுக்கும் மாதம் ரூ.1,000: அமைச்சர்

தமிழ்நாட்டில் HIV பாதித்த குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், தமிழ்நாட்டில் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகள், HIV தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறினார்.
Similar News
News September 16, 2025
MGR படத்தை பயன்படுத்த ADMK-க்கு மட்டுமே உரிமை: KTR

MGR போட்டோவை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்கிறது; புதிதாக வரும் கட்சிகள் MGR போட்டோவை பயன்படுத்தி, அவரது புகழை திருட பார்ப்பதாக விஜய் மீது ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல, காட்டாறு போல ஓடும் கூட்டம். அவருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. அவர் 3-வது அணி அமைத்தாலும் வெற்றி கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
News September 16, 2025
நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 16, 2025
மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.