News April 21, 2025
காஞ்சிபுரத்தில் கோடைகால பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மொத்தம் 21 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. பெயர்களை பதிவு செய்திட இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண்.7401703481 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News October 24, 2025
காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

காஞ்சிபுரத்தில் நேற்று அக் (23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 24, 2025
20 கிராம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய செய்யாறு ஆறு காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லக்கூடிய இந்த ஆறில் 17 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் இரு கரையோரம் உள்ள சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி, மெய்யாடும்பாக்கம், திருமுக்கூடல், மலையங்குளம், வயலக்காவூர், மாகரல், இளையனார் வேலூர், கம்பராஜபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
News October 23, 2025
காஞ்சிபுரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!