News April 21, 2025
பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர்

பெரம்பலூர் அருகில் உள்ள தஞ்சை மாவட்டம் கடுவெளியில் ஆகாசபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோலில் திருமணமாகாதவர்கள் இங்குச் சென்று தங்களது நட்சத்திர நாளில் மூலவர் சன்னதியில் சாம்பிராணி புகைவிட்டுப் பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்கள்.
Similar News
News November 5, 2025
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (நவ.05) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 13 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
News November 5, 2025
பெரம்பலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
பெரம்பலூர்: கொலை குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள்

பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு நில பிரச்சினை காரணமாக லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகியோர்கள் கட்டையால் தாக்கியதில் அரசன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை முடித்து இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை (ம) அபராதம் விதிக்கப்பட்டது.


