News April 21, 2025

காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

image

நாகை மாவட்டம் கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News September 14, 2025

நாகை: வேளாண்துறை முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் தங்களது வேளாண்மை பயன்பாட்டிற்கு பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தும் போது, மருந்தின் அளவை அதிக நச்சுத்தன்மை இல்லாத அளவிற்கு கட்டுக்குள் வைத்து பயன்படுத்த வேண்டும். பூச்சிகொல்லி மருந்து பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகி அறிந்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

நாகை மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

image

நாகை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News September 14, 2025

நாகை புதிய கடற்கரையில் பல்சுவை நிகழ்ச்சி

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருச்சி தியேட்டர் குழுவின் சிரிப்பும் சிந்தனையும் கலந்த பல்சுவை நிகழ்ச்சி, இன்று(செப்.14) மாலை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்து நம் செவிகளுக்கு விருந்தளிக்க இருப்பதால், பொதுமக்கள் வருகை தந்து பல்சுவை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துள்ளனர். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!