News April 21, 2025

மக்கள் குறைவிற்கு முகாமில் 580 கோரிக்கை மனுக்கள்

image

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி, 580 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெற்றுக்கொண்டார்.

Similar News

News April 22, 2025

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன்

image

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 42 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு பூதப்பாண்டியில் அரசு மருத்துவமனையில் இசிஜி கருவி அமைக்க இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

News April 21, 2025

திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

image

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News April 21, 2025

கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை தண்டனை

image

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிடாலம் பகுதியில் 2014ஆம் ஆண்டு, புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தாக்கியதாக, தற்போதைய கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!