News April 21, 2025
JEE மெயின்ஸ் தேர்வில் அசத்திய கிராமம்… 40 பேர் தேர்ச்சி

JEE முதன்மைத் தேர்வில் பிஹாரை சேர்ந்த கிராமம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பட்வ டோலி என்ற கிராமத்தில், இலவச பயிற்சி அளிக்கும் ‘விருக்ஷா சன்ஸ்தான்’ நிறுவனத்தில் பயிற்சிபெற்ற 28 பேர் உள்பட 40 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கின்றார். இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்ற கிராமங்களுக்கும் கிடைத்தால் நாட்டுக்கே மாற்றம் கிடைக்கும்.
Similar News
News December 29, 2025
IND vs NZ: டிக்கெட் விற்பனையில் முக்கிய மாற்றம்

IND அணி NZ-க்கு எதிராக 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜன.18-ல் இந்தூரில் நடக்கும் கடைசி போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *‘District by Zomato’ தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். *மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் ID கார்டுகளை சமர்ப்பிப்பது அவசியம். *வரும் 31-ம் தேதி காலை 11 மணி to ஜன.1 மாலை 5 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.
News December 29, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. அதிர்ச்சித் தகவல்

<<18703577>>’கௌரி’ சீரியல் நடிகை நந்தினி தற்கொலை<<>> செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பிரேக் காரணமாக அவர் பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கி இருந்த அறையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
News December 29, 2025
மகளிர் மாநாட்டால் சங்கி கூட்டத்துக்கு தூக்கம் வராது: DCM

நிதி, கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமையாக மத்திய அரசு பறித்து வருவதாக DCM உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சுயமரியாதை கொண்ட மகளிர் உள்ளவரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை நெருங்க முடியாது எனவும் சாடியுள்ளார். இந்த மாநாட்டை பார்த்து அடுத்த 10 நாள்களுக்கு சங்கி மற்றும் அடிமை கூட்டத்துக்கு தூக்கம் வராது என்றும் விமர்சித்துள்ளார்.


