News April 21, 2025
CSK டிக்கெட் விற்பனை மந்தம்… அதிருப்தியில் ரசிகர்கள்

வழக்கமாக CSK போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ந்து தோல்விகளை சென்னை அணி சந்தித்து வருவதால் SRH-க்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை வழக்கத்துக்கு மாறாக மந்தமாக உள்ளது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் விரும்பாததை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது.
Similar News
News August 14, 2025
மீண்டும் EPS-ஐ தாக்க தொடங்கிய OPS

இழிவான நடத்தை கொண்டவர் EPS என OPS சாடியுள்ளார். மேலும், தலைமை பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத EPS-யிடம் ADMK சிக்குண்டு கிடப்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், செல்லூர் ராஜு, தம்பிதுரை என ADMK மீண்டும் ஒன்றிணைய நினைக்கும் மூத்தத் தலைவர்களை குறிவைத்து அவர் அவமதிப்பு செய்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீண்ட காலம் அமைதி காத்த OPS மீண்டும் EPS-யை தாக்க தொடங்கியுள்ளார்.
News August 14, 2025
Office Laptop-ல் Whatsapp Login பண்ணாதீங்க..!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலியாக மாறிவிட்டது Whatsapp. ஆனால், ஆபீஸில் தரும் லாப்டாப்களில் Whatsapp-ஐ பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்துள்ளது. அப்படி செய்தால் உங்களது அலுவலகம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எளிதில் தெரிந்துக்கொள்ள முடியுமாம். Screen Monitoring, Malware போன்ற விஷயங்களை கொண்டு உங்கள் தகவல்களை திருடமுடியும் என்கின்றனர். SHARE.
News August 14, 2025
தூய்மை பணியாளர்கள் விவகாரம்.. CMக்கு நெருக்கடி

தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.