News April 21, 2025
போப் தேர்வு எப்படி நடைபெறும்? (3/3)

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் யாருக்கும் கிடைக்காவிட்டால், வாக்குச்சீட்டுகள் எரிக்கப்பட்டு கரும்புகை வெளியிடப்படும். போப் தேர்வு செய்யப்பட்டால், வெண் புகை வெளியிடப்படும். அதை வைத்து மக்கள் போப் தேர்வானதை அறிந்து கொள்வார்கள். பின்னர், புதிய போப் தனது புதிய பெயரை தேர்வு செய்துகொண்டு பால்கனி மூலம் மக்களுக்கு காட்சியளிப்பார்.
Similar News
News November 5, 2025
விஷால் மீது ‘மகுடம்’ படத்தின் EX இயக்குநர் புகார்

விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படத்தை ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங் தொடக்கத்திலேயே இருவருக்கும் முட்டிக்கொள்ள விஷாலே அப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் கதைக்காக ரவி அரசுக்கு ₹2.5 கோடி கொடுத்து செட்டில் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சொன்னபடி பணத்தை தராததால், அவர் இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 5, 2025
CM கூறியது வடிகட்டிய பொய்: விஜய்

இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகள் தனக்கு விதிக்கப்பட்டதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் நன்றாக பார்க்கும் வகையில் இடத்தை கேட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால், மக்கள் நெருக்கடியாக இருந்து பார்க்கும் இடத்தைத்தான் அரசு கொடுத்தது என சாடிய அவர், கரூர் விவகாரத்தில் முதல்வர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என்று விமர்சித்துள்ளார்.
News November 5, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பு

தேர்தல் கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம் எனவும் அதனை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக, பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். அதிமுக நிர்வாகிகளின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.


