News April 21, 2025
தஞ்சை: 10th பாஸ் போதும் ரூ.25,000 சம்பளம்

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். SHARE IT.
Similar News
News August 9, 2025
வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் நகை கொள்ளை

தஞ்சாவூர் தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நான்கு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வீரமணிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தஞ்சை: புலனாய்வுத் துறையில் வேலை! ரூ.1,42,400 சம்பளம்!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <