News April 21, 2025
நாமக்கல்லில் 25-ம் தேதி இலவச பயிற்சி!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை தொடர்கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 23, 2025
சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவு: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

சேந்தமங்கலம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் மறைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News October 23, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 23, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 423 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 23-ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு: எருமப்பட்டி 20 மிமீ, குமாரபாளையம் 3.20 மிமீ, மங்களபுரம் 12.60 மிமீ, நாமக்கல் 90 மிமீ, பரமத்திவேலூர் 35 மிமீ, புதுச்சத்திரம் 17மிமீ, ராசிபுரம் 22 மிமீ, சேந்தமங்கலம் 61.20 மிமீ, திருச்செங்கோடு 18 மிமீ, ஆட்சியர் வளாகம் 19 மிமீ, கொல்லிமலை செம்மேடு 35 மிமீ என மொத்தம் 423 மிமீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.