News April 21, 2025
பாஜக MP மீது கிரிமினல் வழக்கு?

SC மற்றும் தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய <<16159926>>பாஜக<<>> எம்பி நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரலாமா என வழக்கறிஞர் ஒருவர் SC-யிடம் அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டின் அனுமதி தேவைப்படாது, ஆனால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலை பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநர் மற்றும் வக்ஃப் விவகாரத்தில் SC-யின் தீர்ப்பை துபே கடுமையாக சாடியிருந்தார்.
Similar News
News September 11, 2025
கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

கத்தார் அரசர் தமீம் பின் ஹமாத்துடன் PM மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கத்தார் தலைநகர் தாஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்த அவர், இந்த தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார். முன்னதாக, ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து தாஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
News September 11, 2025
செங்கோட்டையனை பாஜக இயக்குகிறது: திருமா

அமித்ஷாவை சந்தித்ததன் மூலம் செங்கோட்டையனின் பின்னால் பாஜக இருப்பது உறுதியாகியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியே போகவிடாமல், கூட்டணிக்குள்ளும் தனித்து செயல்படவிடாமல் அதிமுகவை கபளிகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், EPS நீக்கிய ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் எந்த துணிச்சலில் சந்திக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 11, 2025
மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸை தோற்ற இந்திய அணி, அதன்பின் தொடர்ச்சியாக 15 முறை டாஸை ஜெயிக்கவே இல்லை. இந்த மோசமான சாதனைக்கு UAE-க்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.