News April 21, 2025
AI-யிடம் நன்றி சொல்லாதீங்க… கரண்ட் செலவாகுதாம்

மின்சார சிக்கனம்; தேவை இக்கணம் என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது அது AI மாடல்களிடம் உரையாற்றுவதற்கும் தேவைப்படுகிறதாம். Thank you, hello, please போன்ற சிறிய உரையாடல்களுக்கு கூட மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாகக் கூறி OPEN AI சிஇஓ சாம் அல்ட்மென் அதிர்ச்சியளித்துள்ளார். எனவே, தேவையானதை மட்டும் AI–யிடம் கேளுங்கள். ப்ளீஸ்…
Similar News
News October 23, 2025
தேவா வீட்டில் சோகம்… நிறைவேறாத ஆசை

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் (எ) சபேசன் இன்று காலமானார். இந்நிலையில், அவரது நிறைவேறாத ஆசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த காலத்து கே.வி.மகாதேவன் முதல் அனைத்து மூத்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளதாக சபேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதை பலரும் பகிர்கின்றனர். RIP
News October 23, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

சுக்கிர பகவான் வரும் நவ.2-ம் தேதி, தனது சொந்த ராசியான துலாமுக்குள் அடியெடுத்து வைப்பதால் பின்வரும் 3 ராசிகளுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்குமாம்: *துலாம்- தொழில்ரீதியாக முன்னேற்றம் அடையும், திருமண உறவு வலுப்பெறும் *தனுசு- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், முதலீடுகள் லாபம் தரும் *மகரம்- வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வுக்கு வாய்ப்பு, வியாபாரம் செழிக்கும், எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.
News October 23, 2025
பிஹார் தேர்தலின் கிங் மேக்கர் இவர்தானா?

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் DCM வேட்பாளராக VIP கட்சி தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இவரது கட்சி போட்டியிடுகிறது. இவர் சார்ந்த நிஷாத் சமூகம் பிஹார் மக்கள் தொகையில் வெறும் 2.5% ஆகும். ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் இந்த சமுதாய மக்கள் பரவி வாழ்வதால், பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும் முக்கிய சமூகமாக உள்ளது.