News April 21, 2025

பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள இரு தமிழர்கள்…

image

நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படும். வேறு எந்த தமிழக வீரரை ஒப்பந்தத்தில் சேர்ந்திருக்கலாம்னு நீங்க சொல்லுங்க…

Similar News

News January 17, 2026

ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு: நயினார்

image

பொங்கல் பண்டிகையில் ₹518 கோடிக்கு மது விற்பனையானதை சுட்டிக்காட்டி, உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு என்று நயினார் விமர்சித்துள்ளார். பொங்கலுக்கு ₹3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ளது திமுக அரசு என சாடிய அவர், இதுபோன்ற ஒரு அரசு இனி தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

பாம்பை வைத்து பொங்கல்.. தமிழ்நாட்டில் விநோதம்

image

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.

News January 17, 2026

வங்கதேசத்திடம் தடுமாறும் இந்திய அணி

image

U19 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 71/3 ரன்களில் தடுமாறி வருகிறது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே(6) , வேதாந்த் திரிவேதி(0), விஹான் மல்கோத்ரா(7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனால் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்து வருகிறார்.

error: Content is protected !!