News April 21, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) முதல் மூன்று நாட்களுக்கு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பிற்பகல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பாக பரமக்குடி, அபிராமம், கமுதி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் மேற்கு பகுதி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News August 5, 2025
கமுதி அருகே 25 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
News August 5, 2025
9 மீனவர்களுக்கு 19ஆம் தேதி வரை இலங்கையில் காவல் நீட்டிபு

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேருக்கும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.
News August 5, 2025
ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பயணிகள் அமரும் நிழற்குடையில் 70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு காவலர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.