News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Similar News

News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<> இணையதளம்<<>>

News April 18, 2025

மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 18, 2025

வேன் மீது கார் மோதி விபத்து பெண் உயிரிழப்பு

image

போச்சம்பள்ளி அடுத்த, காமாட்சிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (42) குடும்பத்துடன் மாருதி 800 காரில் சுற்றுலா சென்று விட்டு திரும்பினார். அப்போது மத்துார் அருகே, கண்ணன்டஹள்ளியில், எதிரே வந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது. இதில், காரிலிருந்த அவரது தாய் உமாராணி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் இடிபாடுகளில் சிக்கிய கோபிநாத்தை 2 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.

error: Content is protected !!