News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

கள்ளக்குறிச்சியில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

கள்ளக்குறிச்சி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கள்ளக்குறிச்சியில் மர்ம முறையில் ஆடுகள் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி: மடத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது பக்கத்து நிலத்துக்காரரான மாடூரைச் சேர்ந்த நாரயணசாமியுடன் அடிக்கடி வரப்பு தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாராயணசாமி பொது வரப்பில் களைக்கொல்லி மருந்து அடித்துள்ளார். அது ரஞ்சித்குமாரின் ஆடுகள் சாப்பிடும் தீவனம் மீது பட்டதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட 4 ஆடுகளும் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: அரசு வேலை ஆசை – ரூ.9 லட்சம் அபேஸ்!

உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆறுமுகம், தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்துள்ளார். இதையறிந்த அவருடன் பணியாற்றிய சிவசங்கர், தனக்கு தெரிந்த நபர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.86 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் ஏமாற்றிய நிலையில், சிவசங்கர் மீது ஆறுமுகம் போலீசில் புகாரளித்தார். அதனடிப்படையில், சிவசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


