News April 21, 2025
திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
Similar News
News July 6, 2025
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று, (ஜூலை 6) இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காவல் துறை அட்டவணையை வெளியிட்டு, அவசர உதவிக்கு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News July 6, 2025
பூமிக்கு அடியில் முருகன்: திண்டுக்கல் கோயில் சிறப்பு!

ரெட்டியார்சத்திரம், ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயில் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்பு முருகன் என பெயர். இங்கே, கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழங்கப்படுகிறது. இதை அணிந்தால் குழந்தை பேறு, தொழிலில் முன்னேற்றம், வீடு, நிலம், சொத்துகள் கிட்டும் என்பது ஐதீகம்.
News July 6, 2025
ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் இங்கே <