News April 21, 2025

உறையூர் உயிரிழப்பு: கே.என்.நேரு மறுப்பு

image

திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அவர், உறையூர் வெக்காளி அம்மன் கோயில் திருவிழாவில் வழங்கிய சுகாதாரமற்ற குளிர்பானத்தை குடித்ததால் தான் பலருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டதாகவும், குடிநீரில், கழிவுநீர் கலக்கவில்லை என்றும் கூறினார்.

Similar News

News October 24, 2025

ALERT: மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க

image

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என IMD அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் 28-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 24, 2025

Zero Haters திரைப்படங்கள்

image

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்களும் இருப்பார்கள், விமர்சகர்களும் இருப்பார்கள். ஆனால் சில திரைப்படங்கள், கதையின் எளிமை, உணர்வின் ஆழம், இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு போன்றவற்றால் அனைவராலும் கொண்டாடப்படுகின்றன. Zero Haters திரைப்படங்கள் சிலவற்றை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 24, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு குட் நியூஸ்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிக பயனர்களை சேர்க்கும் வகையில், விதிமுறையில் சில தளர்வுகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவற்றை பொதுமக்கள் அறிந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ₹1,000 கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு சென்று தளர்வுகள் குறித்த விவரங்களை அறியலாம். SHARE IT.

error: Content is protected !!