News April 21, 2025

ஹெல்மெட் இல்லைனா சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு

image

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டால் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 14, 2025

கேஸ் சிலிண்டர்.. வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

image

LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் தவிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், LPG கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. இதனையடுத்து ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இனி தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.

News October 14, 2025

சற்றுமுன்: குழு அமைத்தார் விஜய்

image

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்க உள்ள நிலையில், N.ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார். இக்குழு, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய உள்ளதாம். மேலும், அவர்களுக்கான உணவு, பஸ் உள்ளிட்ட வசதிகளையும் தவெக ஏற்பாடு செய்ய உள்ளது.

News October 14, 2025

மிக மோசமான நிலையில் உயர்கல்வி

image

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10,500 பணியிடங்களில் 9 ஆயிரத்திற்கும் மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், வெறும் ஆயிரம் நிரந்தர பேராசிரியர்களை கொண்டு கல்லூரிகள் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. முதல்வரே இல்லாமல் 100 கல்லூரிகள் செயல்படுவதாகவும், இதனால், உயர்கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!