News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <
Similar News
News August 9, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட நடு பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி ஊராட்சி ஒன்றியம் டி.கே புரம் டான் பாஸ்கோ பள்ளி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சேர்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.
News August 9, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் விவரம் .
1.வேலூர்- மேல் வல்லம் கிராமம்
2.அணைக்கட்டு- கீழாச்சூர், வெப்பந்தல்
3.காட்பாடி- உள்ளி புத்தூர்
4.குடியாத்தம்- ராமாலை, காந்தி கணவாய்
5.கே.வி.குப்பம்-காலாம்பட்டு
6.பேரணாம்பட்டு- பரவக்கல்
எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட்-8) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.